
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது என உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.
கோவை மாவட்டம், சூலூரை அடுத்த கருமத்தம்பட்டியில் தமிழக அரசுக்குச் சொந்தமான உணவு தானியக் கிடங்கு உள்ளது. இக்கிடங்கில் தானியங்கி சுமை தூக்கும் இயந்திரத்தை தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்து கிடங்கு வளாகத்தில் மரக்கன்றை நட்டு வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்தில் 140 இடங்களில் இதுபோன்ற தானியங்கி இயந்திரம் அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.