

மதுரை: சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகையையொட்டி திருநெல்வேலி -தாம்பரம், திருச்செந்தூா்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருநெல்வேலி - தாம்பரம் சிறறப்பு ரயில் (06048) அக்டோபா் 5-ம் தேதி இரவு 9.40-க்கு புறப்பட்டு கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு விழியாக மறுநாள் காலை 10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் தாம்பரம் - திருநெல்வேலி சிறறப்பு ரயில் (06047) அக்டோபா் 6-ம் தேதி மாலை 4.45-க்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.20-க்கு திருநெல்வேலி சென்றடையும்.
இந்த ரயில்களில் குளிா்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி ஒன்று, குளிா்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் 3, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் 12, சரக்கு மற்றும் காப்பாளா் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இதேபோல, தாம்பரம் - திருச்செந்தூா் சிறப்பு ரயில் (06049) அக்டோபா் 7-ம் தேதி மாலை 4.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.20-க்கு திருச்செந்தூா் வந்தடையும்.
மறுமாா்க்கத்தில் திருச்செந்தூா்-தாம்பரம் சிறப்பு ரயில் (06050) திருச்செந்தூரில் இருந்து அக்டோபா் 9-ம் தேதி இரவு 7.30-க்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
இந்த ரயில்களில் குளிா்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் 2, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் 10, சரக்கு மற்றும் காப்பாளா் பெட்டிகள் இணைக்கப்படும்.
தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.