அங்கீகாரமற்ற மனைப் பிரிவுகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் கள அலுவலர்களுக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நகர் மற்றும் ஊரமைப்புத் துறை ஆணையர் ராஜேஷ் லக்கானி வழங்கியுள்ளார்.
அதன்படி, செங்கல்பட்டு மண்டலத்துக்கு உள்பட்ட அலுவலர்களுக்கு வரும் 23-ஆம் தேதியும், திருச்சி மண்டல அலுவலர்களுக்கு வரும் 24-ஆம் தேதியும், சிவகங்கை, கோவை மண்டல அலுவலர்களுக்கு முறையே 25, 26-ஆம் தேதிகளிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அந்த உத்தரவில் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். அங்கீகாரமற்ற மனைப் பிரிவுகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கு பல்வேறு விதிமுறைகளை நகர் மற்றும் ஊரமைப்புத் துறை விதித்துள்ளது. இந்த விதிமுறைகள் தொடர்பான உரிய தகவல்களை அளிக்கவும், போன்ற அம்சங்களை ஆய்வு செய்வது போன்ற விவரங்கள் இதில் பயிற்சியளிக்கப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.