
நாமக்கல் அருகே தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ.3 மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கீரம்பூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சேலத்தில் இருந்து மதுரைக்கு ஆம்னி வேனில் தங்க நகைகள் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.
அந்த ஆம்னி வேனில் கொண்டு செல்லப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் சுமார் ரூ. 3 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்து மண்டல துணை வட்டாட்சியர் ஒப்படைத்தனர்.