
சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி 2-வது நாளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தும், சில தினங்கள் குறைந்தும் மாற்றமின்றியும் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், விவசாயிகள், வணிகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் எவ்வித மாற்றமின்றி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.75.56 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.69.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
தேர்தல் நேரம் என்பதால் எரிவாயு பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்த்த நிலையில், பெரிதாக மாற்றம் எதுவும் நிகழாமல் சிறிய ஏற்ற இறக்களுடனும், சில தினங்களில் மாற்றமின்றியும் விற்பனையாகி வருகின்றன.