
கடலூரில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட கமல், தான் பின்பற்றும் புதிய யுக்தி ஒன்றைப் பற்றி பேசினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடலூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கமல் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், பல இடங்களில் நுழைய மற்றும் பேச காவல்துறையினர் எனக்கு தடை விதித்துள்ளனர். ஆனால் நான் நடிகன் என்பதால் மக்களிடம் கண்களாலேயே பேசி வாக்கு சேகரிப்பேன். அது என்னால் முடியும் என்று கூறினார்.
மேலும், தபால் வாக்குப்பதிவின் போது போலிசார் தொப்பியை கழற்றி வைத்துவிட்டுத்தான் வாக்களிக்க வேண்டும். காவல்துறையை காவல்துறையாக செயல்பட வைப்பது தமிழக அரசின் கடமை என்றும் கமல் வலியுறுத்தினார்.