
நாமக்கல்: புதனன்று நாமக்கல் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் அத்தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சின்ராஜ் காயம் அடைந்தார்.
நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் புதனன்று நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் அருகே நடந்த விபத்தில் அவர் காயம் அடைந்தார். விபத்தில் காயமடைந்த சின்ராஜ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...