
வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.
திமுக வேட்பாளருக்கு சொந்தமான இடங்களில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் வைத்த பரிந்துரையை குடியரசுத்தலைவர் ஏற்றுக் கொண்டு அனுமதி அளித்ததை அடுத்து, நேற்று இரவு வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம், சுயேச்சை வேட்பாளர் சுகுமாறன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
குடியரசுத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து, வேலூரில் மக்களவைத் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கு அவசர வழக்காக நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...