
இலங்கையில் குண்டுவெடிப்பை அடுத்து சென்னை எம்.ஜி.ஆர். மத்திய ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் மூன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட மொத்தம் 8 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 7 இடங்களில் தற்கொலைத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. இந்த தாக்குதலில் 11 இந்தியர்கள் உள்பட 359 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்துக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஏற்கெனவே 40 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை கண்டறியும்பொருட்டு, அந்நாடு முழுவதும் பாதுகாப்பு படையினர் வியாழக்கிழமை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் குண்டுவெடிப்பை அடுத்து சென்னை எம்.ஜி.ஆர். மத்திய ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். ரயில் நிலையங்களில் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளும் உடைமைகள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதி அளிக்கப்படுகிறது.