
மதுரை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கட்டண முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கட்டண முறைகேடு நடந்ததாகக் கூறி முன்னாள் பேராசிரியர் ஆனந்த கிருஷ்ணன் தொடர்ந்த வழக்கை மதுரைக் கிளை முடித்துவைத்தது.
சாட்டிலைட் கோர்ஸ் எனும் பெயரில் மாணவர்களிடம் இருந்து அதிகக் கட்டணம் வசூலித்தும், முறையான பயிற்சி அளிக்கப்படாமல் ஏமாற்றியதாக மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிய நீதிமன்றம், விசாரணையை சிபிசிஐடி கண்காணிப்பாளர் நேரடியாக கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது.