
சென்னை: மாதவரம் காவல் ஆய்வாளர் ஜவஹரை பணியிடைநீக்கம் செய்து காவல்துறை இணை ஆணையர் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் சட்டம் ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் ஜவஹர், பதவி உயர்வு கிடைக்காததால் தனது பதவியை ராஜிநாமா செய்யப் போவதாகவும், சந்தன கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டைக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பெற்ற பதக்கங்களை திரும்ப ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக நேற்று டுட்டரில் பதிவிட்டு காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக டிடுவிட்டரில் பதிவிட்ட காவல் ஆய்வாளர் ஜவஹரை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர், 15 ஆண்டுகளாக பதிவி உயர்வுக்கான எந்த முன்னெடுப்புகளும் இல்லை என ஜவஹர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.