
தமிழக அரசின் சார்பில் சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் எழும்பூர் அரசு மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆக.7, 8 ஆகிய தேதிகளில் காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டிகளுக்கான தலைப்புகள் ஏற்கெனவே அறிவித்தபடி போட்டி தொடங்கும்போது வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் வரும் புதன்கிழமையும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் வியாழக்கிழமையும் நடைபெறும்.
இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளி, கல்லூரி முதல்வரிடம் உரிய படிவத்தில் பரிந்துரை பெற்று வர வேண்டும். போட்டி விதிமுறைகள், விண்ணப்பப் படிவம் ஆகியவற்றை www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வெற்றி பெறும் மாணவர்களுக்கான ரொக்கப் பரிசுகள் அதே நாளில் வழங்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கோ.விசயராகவன் தெரிவித்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...