கீரனூர் ஜாகீர் ராஜா நாவலுக்கு ரூ.1 லட்சம் பரிசு

எழுத்து அறக்கட்டளையின் சார்பில் கீரனூர் ஜாகீர் ராஜாவின் சாமானியரைப் பற்றிய குறிப்புகள் என்கிற நாவலுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என


எழுத்து அறக்கட்டளையின் சார்பில் கீரனூர் ஜாகீர் ராஜாவின் சாமானியரைப் பற்றிய குறிப்புகள் என்கிற நாவலுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என அந்த அறக்கட்டளையின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் அறிவித்துள்ளார். 
இதுகுறித்து எழுத்து அமைப்பு சார்பில் ப.சிதம்பரம் கூறியிருப்பது:-
தமிழ் இலக்கியத் தளத்தில் பல ஆண்டுகளாக நாவல்களின் வருகை மிகவும் குறைந்துவிட்டது. இந்தக் குறையை நீக்கிடும் வகையில் நாவல் போட்டி நடத்தப்பட்டு, முதல் பரிசு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் போட்டியின் நடுவர்களாக எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், சல்மா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 
போட்டிக்கு 15 நாவல்கள் வந்தன. அதில், கீரனூர் ஜாகீர் ராஜா எழுதிய சாமானியரைப் பற்றிய குறிப்புகள் என்கிற நாவல் முதல் பரிசுக்குரிய நாவலாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில், இந்த நாவலுக்கான வெளியீட்டு விழா நடத்தப்பட்டு, எழுத்தாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும்.
நடுவர்களால் இரண்டாவது, மூன்றாவதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எஸ்.செந்தில்குமார் எழுதிய கழுதைப் பாதை, மலர்மதி எழுதிய மூதேவி ஆகியவையும் தேவைப்பட்டால் எழுத்து அமைப்பு சார்பில் நூல்களாக வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com