பரோலை நீட்டிக்க கோரி நளினி தொடர்ந்த மனு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பரோலை நீட்டிக்க கோரி நளினி தொடர்ந்த மனு தொடர்பாக நாளை மறுநாள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரது மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக 30 நாள்கள் பரோலில் கடந்த மாதம் 25-ஆம் தேதி வெளியே வந்தார். 

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவையின் மாநில துணைப் பொதுச் செயலர் சிங்கராயர் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் மகள் திருமண ஏற்பாடுகளை முடிக்க முடியாததால் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக நாளை மறுநாள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com