மின்வாரியத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்: சீமான் வலியுறுத்தல் 

20 ஆண்டுகளுக்கு மேல் மின்வாரியத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்று  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
மின்வாரியத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்: சீமான் வலியுறுத்தல் 

சென்னை: 20 ஆண்டுகளுக்கு மேல் மின்வாரியத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்று  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செவ்வாயன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

20 ஆண்டுகளுக்கு மேலாக மின்வாரியத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களைப் பணிநியமனம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து மின்வாரிய ஊழியர்கள் நடத்தி வருகின்ற பட்டினிப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அவர்கள் வைத்திருக்கிருக்கும் கோரிக்கை மிகத் தார்மீகமானது. நியாயமானது.

முறையான ஊதியமோ, விபத்து காப்பீடோ இன்றி 1997ஆம் ஆண்டு முதல் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணிபுரியும் தொழிலாளர்களைப் பணிநியமனம் செய்யாது, வெளிமாநிலத்தவரை பணிக்கு அமர்த்தும் நோக்கோடு கேங்மேன் பணியிடத்தை உருவாக்கியிருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. இதன்மூலம், பல ஆண்டுகளாக அரும்பாடாற்றி உழைத்த ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல், கஜா புயல் எனும் பேரிடர் ஏற்பட்டபோது பல நாட்கள் ஓய்வின்றி உழைத்தத் தொழிலாளர்களின் உழைப்பையும் அலட்சியம் செய்திருக்கிறது தமிழக அரசு.

ஆகவே, அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் எனவும், அவர்களை பணிநியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com