ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நான்கு வண்ணங்களில் வாக்குச்சீட்டு முறை!

தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்


தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்த உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன


உச்ச நீதிமன்றத்தில் மாநிலத் தோ்தல் ஆணையம் உறுதியளித்ததன் அடிப்படையில், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும். இதற்கான தேர்தல் அறிவிக்கை டிசம்பர்  6-ஆம் தேதி வெளியிடப்படும், மேலும் அன்றைய தினம் முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கப்படும். 

ஊரக உள்ளாட்சித் தேர்தல் அட்டவணை
டிசம்பர் 6ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாள் டிசம்பர் 13-ஆம் தேதி
வேட்புமனு ஆய்வு 16-ஆம் தேதி நடைபெறும்.
டிசம்பர் 18-ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெறலாம்.

டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். 

வாக்கு எண்ணிக்கை 02.1.2020-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று அறிவித்தார்.

கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தலுக்கு 4 வண்ணங்களில் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் - வெள்ளை
கிராம ஊராட்சி தலைவர் - இளஞ்சிவப்பு
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் - பச்சை
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் - மஞ்சள்

என நான்கு பதவிகளுக்கான வாக்குப் பதிவுக்கும் நான்கு நிறத்தில் வாக்குச்சீட்டுகள் வழங்கப்படும். இதன் மூலம் வாக்காளர்கள் எந்த குழப்பமும் இன்றி வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் ஜனவரி 6ம் தேதி பதவியேற்பார்கள் என்று ஆணையர் அறிவித்தார்.

மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு மொத்தமாக 63,790 வாக்குச்சாவடிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும்.

மொத்தம், 1,18,974 பதவியிடங்களுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக காரணங்களுக்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com