கார்த்திகைத் தீபம்: திருவண்ணாமலை மாவட்டத்துக்கு டிச., 10ம் தேதி உள்ளூர் விடுமுறை

கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்துக்கு டிசம்பர் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகைத் தீபம்: திருவண்ணாமலை மாவட்டத்துக்கு டிச., 10ம் தேதி உள்ளூர் விடுமுறை


திருவண்ணாமலை: கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்துக்கு டிசம்பர் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும்.

இவ்விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுவார்கள். எனவே, கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு டிசம்பர் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும், அன்றைய விடுமுறைக்கு ஈடாக, டிசம்பர் 21ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, காலை 10 மணிக்கு வெள்ளி விமானங்களில் பஞ்ச மூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

இரவு 10 மணிக்கு மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகா், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகா், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரா், ஹம்ச வாகனத்தில் ஸ்ரீபராசக்தியம்மன், புலி வாகனத்தில் ஸ்ரீசண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்ச மூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலா: தீபத் திருவிழாவின் இரண்டாம் நாளான திங்கள்கிழமை காலை 10 மணிக்கு மூஷிக வாகனத்தில் தங்கக் கவசம் அணிந்தபடி ஸ்ரீவிநாயகரும், தங்க சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரரும் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

இரவு 10.30 மணிக்கு வெள்ளி இந்திர விமானங்களில் ஸ்ரீவிநாயகா், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகா், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரா், ஸ்ரீபராசக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்ச மூா்த்திகள் வீதியுலா வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com