
பாமக நிறுவனர் ராமதாஸ்
சென்னை: சாதனைகள் தொடரட்டும் என்று புதனன்று பி.எஸ்.எல்.வி - சி48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பத்து செயற்கைகோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து புதன் மாலை பி.எஸ்.எல்.வி சி 48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்நிலையில் சாதனைகள் தொடரட்டும் என்று புதனன்று பி.எஸ்.எல்.வி - சி48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;
பி.எஸ்.எல்.வி - சி48 ஏவுகலம் இந்தியாவின் ரிசாட் 2பி.ஆர்.1 செயற்கைக் கோளையும், அமெரிக்கா உள்ளிட்ட 4 நாடுகளின் 9 சிறிய செயற்கை கோள்களையும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. பி.எஸ்.எல்.வி வகை ஏவுகலத்தின் 50-ஆவது விண்வெளி பயணம் சாதனைப் பயணமாக அமைந்துள்ளது.
பி.எஸ்.எல்.வி - சி48 ஏவுகலத்தின் இன்றைய சாதனைப் பயணம் ஸ்ரீஹரிஹோட்டா ஏவுதளத்திலிருந்து புறப்பட்ட 75 ஆவது பயணம் ஆகும். இத்தகைய சாதனைகளுக்கு காரணமான
இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்! சாதனைகள் தொடரட்டும்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.