
நினைவு தொடர் ஜோதி ஓட்டம்
கோவில்பட்டி: விவசாயிகள் சங்கத் தலைவர் மறைந்த நாராயணசாமி நாயுடு நினைவு தொடர் ஜோதி ஓட்டம் துவங்கியது.
விவசாயிகள் சங்கத் தலைவர் மறைந்த நாராயணசாமி நாயுடுவின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கோவில்பட்டியில் இருந்து கோவை மாவட்டம் வையம்பட்டி யில் உள்ள அவரது நினைவிடவிடம் நோக்கி தொடர் ஜோதி ஓட்டமும் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு மறைந்த நாராயணசாமி நாயுடுவின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி தொடர் ஜோதி ஓட்டத்தை துவக்கி வைத்தார்.