
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரி பிப்ரவரி 8-ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.
சத்தியமூர்த்திபவனில் பிப்ரவரி 8-ஆம் தேதி மாலை 3 மணியளவில் நடைபெறும் விழாவில் அவர் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
நிகழ்ச்சிக்கு அகில இந்திய செயலாளர்கள் சஞ்சய் தத், சிரிவல்ல பிரசாத், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர்.
செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள எச். வசந்தகுமார், கே. ஜெயக்குமார், எம்.கே. விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் பொறுப்பேற்க உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...