சுடச்சுட

  

  கேபிள் டி.வியில்  புதிய கட்டண விதிமுறை: அமல்படுத்த மார்ச் 31ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு 

  By DIN  |   Published on : 12th February 2019 08:32 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  bigtv

   

  சென்னை: கேபிள் டி.விவிரும்பிய சேனல்களை மட்டும் பார்க்கும் புதிய கட்டண விதிமுறை திட்டத்தை அமல்படுத்துவதற்கான கால அவகாசமானது மார்ச் 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

  சந்தாதாரர்கள் கேபிள் டி.வியில் தாங்கள் விருப்பப்பட்ட சேனல்களை மட்டும் பார்க்க கட்டணம் செலுத்தும் புதிய நடைமுறையை அமல்படுத்த டிராய் முடிவு செய்துள்ளது. 

  இந்த நடைமுறை பிப்ரவரி 1ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.  ஆனால் சேனல்களை தேர்வு செய்வதற்கு கூடுதல் காலஅவகாசம் வேண்டும் என சந்தாதாரர்கள் தரப்பில் வேண்டுகோள் விடுத்தனர்.

  இதனை ஏற்றுக் கொண்டு கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுகிறது என டிராய் அறிவித்துள்ளது. 

  இதன்படி கேபிள் டி.வி. புதிய கட்டண விதிமுறைகளை அமல்படுத்த மார்ச் 31ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தற்போது அறிவிப்பு வெளிகியாகியுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai