
நியாயவிலைக் கடைகளில் உளுத்தம்பருப்பு கொடுக்காதது ஏன் என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்தார்.
பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் செங்குட்டுவன் பேசும்போது, நியாயவிலைக் கடைகளில் உளுத்தம்பருப்பு கொடுக்கப்படவில்லை என்றார்.
அப்போது அமைச்சர் காமராஜ் அளித்த விளக்கம்:
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தில் கையெழுத்திட்ட பிறகும் விலையில்லா அரிசியைத் தொடர்ந்து அளித்து வருகிறோம். முன்பு 13 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பும், 7 ஆயிரம் மெட்ரிக் டன் உளுத்தம்பருப்பும் கொள்முதல் செய்து விநியோகித்து வந்தோம். ஆனால், துவரம் பருப்பை மாதம்தோறும் ஒரு கிலோவாக மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காக 20 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பைக் கொள்முதல் செய்து அளித்து வருகிறோம் என்றார்.