சுடச்சுட

  

  மத்திய அரசை தம்பிதுரை விமர்சித்ததில் தவறில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

  By DIN  |   Published on : 12th February 2019 01:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jayakumar

  மத்திய அரசை தம்பிதுரை விமர்சித்ததில் தவறில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  

  மக்களவையில் திங்கள்கிழமை இடைக்கால பட்ஜெட் உரை மீதான பொது விவாதத்தில் பங்கேற்று அவர் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, ஜிஎஸ்டியை தங்களது மூளையில் உதித்த திட்டமாக காங்கிரஸும், பாஜகவும் கூறுகின்றன. இதன் மூலம் மாநில அரசின் அதிகாரம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

  ஜிஎஸ்டியை பொருத்தமட்டில் பணம் மத்திய அரசிடம் உள்ளது. அதைப் பெறுவதற்கு மாநில அரசுகள் கெஞ்சும் நிலை உள்ளது என கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் தம்பிதுரை பேசியது தனிப்பட்ட கருத்தா? அரசின் கருத்தா? என தமிழக சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ பொன்முடி கேள்வி எழுப்பினார்.

  இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், மத்திய பாஜக அரசை விமர்சித்து மக்களவையில் தம்பிதுரை பேசியதில் தவறில்லை. ஜிஎஸ்டியால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தம்பிதுரை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். ஒரு திட்டத்தால் மாநிலங்கள் பாதிக்கப்படும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மாநில அரசின் கடமை என்றார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai