ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவகத்தில் திடீர் சோதனை: ரூ.1.92 லட்சம் பறிமுதல்

ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு - லஞ்ச ஒழிப்புத் காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத
Updated on
1 min read


ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு - லஞ்ச ஒழிப்புத் காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத ரூ.1.92 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.1.92 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்த், அலுவலக உதவியாளர் சக்தி, தற்காலிக ஊழியர் சுரேஷ், இடைத்தரகர்கள் ரவி, செந்தில்குமார், குப்புராஜ், குப்புசாமி, சாகுல்ஹமீது, முத்துசாமி ஆகிய 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com