
உதகையில் ஒரு மாதமாகத் தொடர்ந்து உறை பனி கொட்டியதால் கடும் குளிர் நிலவி வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் பெய்த பலத்த மழையையடுத்து மீண்டும் நீர்ப் பனி கொட்டத் தொடங்கியுள்ளது. இதனால் நகரில் மீண்டும் கடும் குளிர் நிலவுகிறது.
உதகை மாவட்டம், அதன் சுற்றுப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் சுமார் 2 மணி நேரம் வரை பலத்த மழை பெய்த நிலையில், சில இடங்களில் ஆலங்கட்டிகளும் விழுந்தன. ஆனால், ஞாயிற்றுக்கிழமை இரவே நீர்ப்பனி கொட்டத் தொடங்கியது.
இருப்பினும் குளிர் குறைவாகவே இருந்தது. ஆனால், திங்கள்கிழமை பகலில் மழையில்லாமல் மாலையிலிருந்தே நீர்ப்பனி கொட்டத் தொடங்கியதால் இரவில் கடும் குளிர் நிலவியது. இதன் காரணமாக, உறைபனி கொட்டாவிட்டாலும் உதகையில் பனிக்காலம் மேலும் நீடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.