ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல் வருமா?: அமைச்சர் விளக்கம்

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர முயற்சிக்காதது ஏன் என்பது குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.


பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர முயற்சிக்காதது ஏன் என்பது குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.
நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் செங்குட்டுவன் பேசும்போது, ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டு வர வேண்டியதுதானே என்றார்.
அப்போது அமைச்சர் டி.ஜெயக்குமார் குறுக்கிட்டு கூறியது:
மாநில அரசு தன்னாட்சி பெற்றதாக இருக்க வேண்டும் என்று திமுக கருதுகிறதா இல்லையா? 
மாநிலத்துக்குப் பலாச் சுளைபோல வருமானம் வரக்கூடியதாக பெட்ரோல், டீசலின் மீதான வரிதான் உள்ளது. இதனை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று கேட்க முடியுமா? பெட்ரோல், டாஸ்மாக், பதிவுத்துறை ஆகியவற்றின் மூலமாகத்தான் மாநிலத்துக்கு வருமானம் வருகிறது. இதை இழக்க முடியாது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com