
கடலூரில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 16 பேர் குற்றவாளிகள் என்று கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் 2014ம் ஆண்டு அரசுப் பள்ளி மாணவிகள் இருவர் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை 2016ல் விசாரணை நடத்திய சிபிசிஐடி பாதிரியார் உட்பட 23 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது. இதில், 2 பேர் இறந்த நிலையில், சதீஷ்குமார், தமிழகத்தி ஆகிய 2 பேர் தலைமறைவாக உள்ளனர்.
17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், பாதிரியார் அருள்தாஸ், ஸ்ரீதர், ஆனந்தராஜ், மோகன், மதிவாணன், அன்பு, உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று கடலுர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் கிரிஜா, சர்மிளா பேகம், கவிதா, அமுதா, ராதிகா, கலா, லட்சுமி உட்பட 8 பெண்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மகாலட்சுமி என்ற பெண்ணை நீதிபதி விடுவித்த நிலையில், குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 16 பேருக்குமான தண்டனை விவரம் ஜனவரி 7ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.