
சபரிமலை விவகாரத்தில் வலதுசாரிகள் கலவரத்தை உருவாக்கி வருவகின்றனர் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னை விமான நிலையித்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
நடிப்பு என்பது தொழில், அரசியல் என்பது எனது விருப்பம், இரண்டையும் இணைக்க விரும்பவில்லை. இனிமேல் படத்தில் மட்டும் தான் அரசியல் கருத்து கூறவேண்டும் என்று எனக்கு அவசியம் இல்லை. வெளியில் வந்தும் சொல்வேன்.
அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் நல்லதுதான். சபரிமலையில் வலதுசாரிகள்தான் கலவரத்தை உருவாக்குகிறார்கள். திருவாரூரில் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நிலைபாடு குறித்து நாளை அல்லது நாளை மறுநாள் கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும்.
ரஜினி, கமல் என யார் கூட்டணிக்கு வந்தாலும் சேர்த்துக்கொள்வோம் என்பது பிரதமரின் நிலைபாடு. வருவோமா என்பது எங்கள் நிலைபாடு. இதுகுறித்து ஆசோசித்து சொல்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.