
திருவாரூர் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இதுவரை 52 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இதுகுறித்து, அதிமுக வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
திருவாரூர் இடைத் தேர்தலில் போட்டியிட வியாழக்கிழமை வரை 52 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. விருப்ப மனுக் கட்டணமாக ரூ.13 லட்சம் இதுவரை பெறப்பட்டுள்ளது என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. விருப்ப மனு கட்டணமாக தலா ஒரு நபரிடம் இருந்து ரூ.25 ஆயிரம் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.