

கடந்த ஒரு மாதமாக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் பாம்பன் ரயில் தூக்கு பாலம் வியாழக்கிழமை பாதியளவு திறந்து ஆய்வு செய்பப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி விசைப்படகுகள் செல்வதற்காக திறந்து மூடும்போது, பாம்பன் தூக்குப் பாலம் சேதமடைந்தது.
அதையடுத்து, ராமேசுவரம் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, இந்திய ரயில்வே தலைமைப் பொறியாளர் மேற்பார்வையில் பாம்பன் ரயில் தூக்கு பாலம் சீரமைப்புப் பணிகள் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து 30 நாள்களாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தூக்குப் பாலத்தின் ஒரு பகுதியை திறந்து மூடும் பணியில் பொறியாளர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, 50 சதவீதம் மட்டுமே திறந்து ஆய்வு செய்தனர். விரைவில் தூக்குப் பாலம் முழுமையாகத் திறக்கப்பட்டு, ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என, ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.