எம்எல்ஏக்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த வேதா என்ற தாமோதரன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:
பல்வேறு அரசியல் காரணங்களால் 18 எம்எல்ஏக்களை சட்டப்பேரவைத் தலைவர் தகுதியிழப்பு செய்து உத்தரவிட்டார். இதற்கு எதிராக 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என 18 பேரும் அறிவித்துள்ளனர். இச்சூழலில் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தி, புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்ய தேர்தல் ஆணைம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், 18 தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 27 லட்சம் வாக்காளர்கள், தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் உள்ளனர்.
எனவே, அந்த 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எம்எல்ஏக்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.