
சென்னை மணலி புதுநகர் குழந்தை யேசு திருத்தல தேரோட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
சென்னை மணலி புதுநகர் அற்புத குழந்தை யேசு திருத்தலம் 50 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.
இத்தலத்திற்கு குழந்தை வரம் வேண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆண்டுப் பெருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு 39-ஆவது ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் குழந்தை யேசு உருவம் பொறித்த திருக்கொடி திருத்தல வளாகத்தில் 60 அடி உயர கொடிக் கம்பத்தில் ஏற்றப்பட்டது. சனிக்கிழமை தேர் திருவிழா நடைபெற்றது.
தேர் திருவிழாவை மயிலை முன்னாள் பேராயர் ஏ.எம் சின்னப்பா தொடங்கி வைத்தார்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இதில் கலந்து கொண்டு தேரை இழுத்தனர்.