
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டி தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
மேலும் படிக்க: ஜல்லிக்கட்டை கண்காணிக்க குழு
வழக்கை விசாரித்த நீதிபதி, ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் காயமடைந்தாலோ அல்லது உயிரிழந்தாலோ அவர்களுக்கோ அல்லது அவர்களது குடும்பங்களுக்கோ இழப்பீடு தருவது யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
இது பற்றிய மேலதிகத் தகவல்களை பெற: ஜல்லிக்கட்டுப் போட்டிகள்: தேதிகள் அறிவிப்பு
ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவது யார், இழப்பீடு தருவது தமிழக அரசா? அல்லது ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தும் கமிட்டியா? என்றும் நீதிபதிகள் கேட்டுள்ளனர்.
இது குறித்து வரும் 18ம் தேதிக்குள் பதில் தரவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.