மேல்முறையீடு: பால கிருஷ்ணாவுக்கு விதித்த தண்டனையை நிறுத்தி வைத்தது சிறப்பு நீதிமன்றம்

பேருந்து மீது கல்வீசித் தாக்கிய வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேல்முறையீடு: பால கிருஷ்ணாவுக்கு விதித்த தண்டனையை நிறுத்தி வைத்தது சிறப்பு நீதிமன்றம்


சென்னை: பேருந்து மீது கல்வீசித் தாக்கிய வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும், அதுவரை தண்டனையை நிறுத்திவைக்குமாறும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பால கிருஷ்ணா  ரெட்டி சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி, தண்டனையை நிறுத்திவைப்பதாக உத்தரவிட்டார்.

1998ம் ஆண்டு விஷச் சாராயம் குடித்து 33 பேர் உயிரிழந்த சம்பவத்தின் போது நடந்த சாலை மறியல் போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசித் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

20 ஆண்டுக்கு முன் நடந்த போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்கில், 108 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு, அதில் 16 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர்.  

3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி எம்எல்ஏ பதவியை இழக்கும் நிலை ஏற்பட்ட நிலையில், தண்டனை அறிவித்த சிறப்பு நீதிமன்றமே சற்று நேரத்தில் அதனை நிறுத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பாலகிருஷ்ணா ரெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு ஓசூர் அருகே சாலை மறியல் நடந்த இடத்தில் நான் இல்லை. பேருந்து மீது கல்வீசி தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வசதியாக தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com