எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராய விருதுகள் அறிவிப்பு

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், தமிழறிஞருமான பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி, எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயத்தின்
எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராய விருதுகள் அறிவிப்பு


தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், தமிழறிஞருமான பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி, எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயத்தின் பாரிவேந்தர் பைந்தமிழ் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழ்ப்பேராயம் புரவலர் டி.ஆர்.பாரிவேந்தர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயம் அமைப்பின் மூலம் ஆண்டுதோறும் தமிழ்ப் படைப்பாளிகள், திறனாய்வாளர்கள், சாதனை புரிந்த பேரறிஞர்களைத் தேர்வு செய்து விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறோம்.
இந்த ஆண்டு தமிழ்ப்பேராயத்தின் பாரிவேந்தர் பைந்தமிழ் விருது தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்திக்கு வழங்கப்பட உள்ளது. அவருக்கு விருதுடன் ரூ. 3 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
இதர விருதுகள் தேர்வுக்கு வரப்பெற்ற நூல்களை நீதிபதி பி.தேவதாஸ் தலைமையிலான தேர்வுக்குழுவினர் பரிசீலனை செய்து விருதுக்குரியவர்களைத் தேர்வு செய்தனர்.
புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதுக்கு கவிப்பித்தன் எழுதிய நீவா நதி, பாரதியார் கவிதை விருதுக்கு மரபின் மைந்தன் முத்தையா எழுதிய இணைவெளி, அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருதுக்கு இரா.கற்பகம் எழுதிய மந்திர மரமும் மாய உலகங்களும் நூல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 
பெ.நா.அப்புசாமி அறிவியல் தமிழ் விருது மற்றும் அப்துல்கலாம் தொழில்நுட்ப விருதுக்கு சந்திரிகா சுப்ரமணியன் எழுதிய இணையக் குற்றங்களும், இணையவெளிச் சட்டங்களும் நூலும், ஆனந்தகுமாரசாமி கவின்கலை விருது மற்றும் முத்துத் தாண்டவர் தமிழிசை விருதுக்கு அரிமளம் சு.பத்மநாபன் எழுதிய கம்பனில் இசைத்தமிழ் நூலும், பரிதிமாற் கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருதுக்கு ஆ.தனஞ்செயன் எழுதிய விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் நூலும், சுதேசமித்திரன் தமிழ்இதழ் விருதுக்கு வி.முத்தையா எழுதிய காக்கைச் சிறகினிலே நூலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தொல்காப்பியர் தமிழ்சங்க விருதுக்கு ஸ்விட்சர்லாந்து தமிழ்க் கல்விச் சேவை அமைப்பும்,அருணாசலக் கவிராயர் விருதுக்கு களரி தொல்கலைகள் கலைஞர்கள் மேம்பாட்டு மையமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்றார் தமிழ்ப்பேராயம் புரவலர் டி.ஆர். பாரிவேந்தர். 
எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகப் பதிவாளர் என்.சேதுராமன் ,தமிழ்ப்பேராயம் தலைவர் ஆர்.பாலசுப்ரமணியன், நிதி மேலாண்மை இயக்குநர் மு.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com