ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த திமுக அனுமதி தரவில்லை: மு.க.ஸ்டாலின்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த திமுக அனுமதி தரவில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த திமுக அனுமதி தரவில்லை: மு.க.ஸ்டாலின்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த திமுக அனுமதி தரவில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஹைட்டோ கார்பன் திட்டம் தொடர்பாக திமுக சார்பில் சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து அக்கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினார். அதில், பேரவைத் தலைவர் அவர்களே, எங்களுடைய உறுப்பினர் கொண்டு வந்திருக்கக்கூடிய, ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் மூலமாக சில விளக்கங்களைப் பெறுவதற்காக கவன ஈர்ப்புத் தீர்மானங்களைக் கொண்டுவந்து நல்ல விளக்கங்களைத் தந்தார்கள். ஆனால், அந்த விளக்கங்களைத் தருகின்ற போது, இந்த அவையில் தவறான வகையில் பதிவாகக்கூடிய வகையில் அமைச்சர் இங்கு விளக்கம் சொல்லியிருக்கின்றார்கள். இங்கு தெளிவாக சொல்லப் பட்டிருக்கின்றது. அதாவது உங்கள் ஆட்சி வந்ததற்குப் பிறகு காலாவதி ஆகிவிட்டது என்று சொல்கின்றீர்கள். ஏற்றுக்கொள்கின்றேன். 

‘தி கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்ப்பரேசன் லிமிடெட்’ நிறுவனத்திற்கு 4 ஆண்டு காலத்திற்கு வழங்கப்பட்ட ஆய்வு உரிமம். அதாவது அனுமதித்ததை இரத்து செய்வது அல்ல, ஆய்வு உரிமம் காலாவதி ஆகிவிட்டது என்றுதான் இதில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றது. அனுமதி அளிப்பதற்கு இந்த தமிழக அரசிற்கு உரிமையே கிடையாது. மத்திய அரசு தான் அதை அனுமதிக்க வேண்டும். மத்திய அரசின் பவர் தான் அது. அதனால், தவறான தகவலை இங்கு பதிவு செய்திருக்கின்றார். எனவே, எம்.ஓ.யு கையெழுத்து தான் போடப்பட்டது. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தைத்தான் எடுத்து நீங்கள் காட்டியிருக்கின்றீர்கள். அது உண்மையல்ல, அனுமதி கொடுத்து வழங்கப்பட்ட தாக்கீது அல்ல அது.

நீங்கள் என்னதான் அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியாக சொல்லிக்கொண்டிருந்தாலும். மத்திய அரசு அதையும் மீறி அதனைக் கொண்டுவருகின்ற முயற்சியில் ஈடுபடுகின்ற காரணத்தால் தான் அதைக் கண்டிக்கக்கூடிய வகையில் தான் இந்தப் போராட்டத்தை நடத்துகின்றோம் என்பதை அமைச்சருக்கும் இந்த அரசுக்கும் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். “குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை என்பது எந்த நிலையில் உள்ளது, என்ற கேள்வியை; தி.மு.கழகம் தொடர்ந்து முன் வைத்துக்கொண்டிருக்கிறது”. குட்கா விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் தான் சொன்னது. நீதிமன்றம் சொல்லித்தான் குட்கா விசாரணை துவங்கி இருக்கின்றது. இப்பொழுது சி.பி.ஐ விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதா இல்லையா என்பது தான் என்னுடைய கேள்வி. இவ்வாறு அவர் பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com