கடற்படைக்காக 111 ஹெலிகாப்டர்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும்: கோவா பிராந்திய கடற்படை தலைமை அதிகாரி

இந்திய கடற்படைக்காக 111 ஹெலிகாப்டர்கள் நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளதாக கடற்படையின் கோவா பிராந்திய தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் பிலிப்போஸ் ஜார்ஜ் பினுமூட்டில் தெரிவித்தார்.
கடற்படைக்காக 111 ஹெலிகாப்டர்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும்: கோவா பிராந்திய கடற்படை தலைமை அதிகாரி

இந்திய கடற்படைக்காக 111 ஹெலிகாப்டர்கள் நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளதாக கடற்படையின் கோவா பிராந்திய தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் பிலிப்போஸ் ஜார்ஜ் பினுமூட்டில் தெரிவித்தார்.
 அரக்கோணத்தில் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர் விமானிகள் பயிற்சிப்பள்ளியில் விமானிகள் பயிற்சி நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பிலிப்போஸ் ஜார்ஜ் பினுமூட்டில் பங்கேற்று, விமானிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கிப் பேசியது:
 இந்திய கடற்படையில் தற்போது 235 ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள், அதிநவீன விமானங்கள் ஆகியவை உள்ளன. வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 500-ஆக உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் எம்ஹெச்-60ஆர் ரகத்திலான 24 ஹெலிகாப்டர்கள் சேர்க்கப்பட உள்ளன. இவை தவிர 16 மேம்படுத்தப்பட்ட எடைகுறைந்த ஹெலிகாப்டர்களும் இணைக்கப்பட உள்ளன.
 இதைத் தொடர்ந்து 10 காமோவ்-28 ரக போர்க்கால நீர்முழ்கிக் கப்பல் எதிர்ப்பு ஹெலிகாப்டர்களில் சென்சார்கள் உள்ளிட்ட அதிநவீன கருவிகளைப் பொருத்தும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்திய கடற்படைக்காக 111 ஹெலிகாப்டர்களை நம் நாட்டிலேயே தயாரிக்கும் திட்டத்திற்கான தொடக்கப் பணிகளும் நடந்து வருகின்றன. இவை சேடர் ரக ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாக இருக்கும். இந்திய கடற்படையில் அதிநவீன ஹெலிகாப்டர்களும், விமானங்களும் சேர்க்கப்பட்டு வரும் இக்காலத்தில் இந்த இளம் விமானிகள் பணிக்கு சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும் என்றார் அவர்.
 இவ்விழாவிற்கு அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள கமாண்டிங் ஆபீசர் கேப்டன் ஸ்ரீரங் ஜோக்லேகர் தலைமை வகித்தார். பயிற்சி பெற்ற 7 விமானிகளுக்கு விழாவில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அனைத்துப் பயிற்சிகளிலும் சிறந்து விளங்கியதற்காக கேரள ஆளுநரின் சுழற்கோப்பை மற்றும் பயிற்சிகளில் தரவரிசையில் முதலில் வந்ததற்காக கடற்படை கிழக்குப் பிராந்திய தலைமை அதிகாரியின் சுழற்கோப்பையை லெப்டினன்ட் நைசன் மார்க்கோஸுக்கும், மைதானப் பயிற்சிகளில் சிறந்து விளங்கியதற்காக சப்-லெப்டினன்ட் ஸ்ரீராமுக்கு புத்தகப் பரிசையும் ரியர் அட்மிரல் பிலிப்போஸ் ஜார்ஜ் வழங்கினார்.
 முன்னதாக கடற்படை வீரர்களின் அணிவகுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். விழாவில் ஹெலிகாப்டர் விமானிகள் பயிற்சிப்பள்ளி முதல்வர் கேப்டன் டிஜோ கே.ஜோசப் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com