கடல் சீற்றம்: மாமல்லபுரத்தில் நிறுத்தப்பட்ட கடலோரக் காவல் படை படகுகள்

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டதால், ராமேசுவரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கடலோரக் காவல் படையின் இரு படகுகள் சனிக்கிழமை மாமல்லபுரம் கடற்கரையில் நிறுத்தப்பட்டு
கடல் சீற்றம்: மாமல்லபுரத்தில் நிறுத்தப்பட்ட கடலோரக் காவல் படை படகுகள்

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டதால், ராமேசுவரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கடலோரக் காவல் படையின் இரு படகுகள் சனிக்கிழமை மாமல்லபுரம் கடற்கரையில் நிறுத்தப்பட்டு 5 மணிநேரத்துக்குப் பின் மீண்டும் புறப்பட்டன.
 ராமேசுவரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கடலோரக் காவல் படையைச் சேர்ந்த இரண்டு நவீன படகுகள் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மாமல்லபுரம் கடல் வழியாகச் சென்று கொண்டிருந்தன. இந்தப் படகுகள் மாமல்லபுரம் கடல் பகுதியைக் கடக்க முயன்றபோது கடல் சீற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இரு படகுகளும் பலத்த ஒலி எழுப்பிய படி, மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலின் தெற்குப் பகுதியில் கரையேறின.
 இந்தப் படகுகளில் பாதுகாப்புப் படை வீரர்கள் 24 பேர் பயணம் செய்தனர். கரையில் நிறுத்தப்பட்ட படகுகளில் இருந்து இறங்கிய பாதுகாப்புப் படை வீரர்கள் அந்நியர்கள் படகில் பிரவேசிக்காமல் இருப்பதற்காக படகுகளைச் சுற்றிலும் தடுப்புகளை அமைத்தனர். இந்த நவீன படகுகள் தரையிலும், தண்ணீரிலும் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 சுமார் 5 மணி நேரம் கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்களும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பார்த்ததுடன், அருகில் நின்று சுயபடம் எடுத்துக் கொண்டனர்.
 பின்னர், கடல் சீற்றம் தணிந்த நிலையில் இரு படகுகளும் காலை 8 மணியளவில் மீண்டும் சென்னையை நோக்கிப் புறப்பட்டுச் சென்றன. படகுகள் கரையில் இருந்து கடலை நோக்கிச் சென்றபோது, கடற்கரை மணல் புகை போல் மேலெழும்பியதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
 இதுகுறித்து போலீஸார் கூறியது:
 கடலோரக் காவல் படை வீரர்கள், கல்பாக்கம் அணு மின் நிலைய பாதுகாப்புக்காக முகாமிட நவீன படகுகளில் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் படகுகள் நிறுத்தப்பட்டு, பின்னர் கடல் சீற்றம் குறைந்தவுடன் அவை புறப்பட்டன என போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com