கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் கண்துடைப்பு

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் கண்துடைப்புக்குத்தான் என மதிமுக பொதுச் செயலர் வைகோ சாடியுள்ளார்.
கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் கண்துடைப்பு
Updated on
1 min read

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் கண்துடைப்புக்குத்தான் என மதிமுக பொதுச் செயலர் வைகோ சாடியுள்ளார்.
 சென்னையிலிருந்து சனிக்கிழமை மதுரை வந்த அவர், விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுக்காவிட்டால், காவிரி டெல்டா மாவட்டங்கள் முற்றிலும் அழிந்துவிடும். கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டமானது வெறும் கண்துடைப்புக்குத்தான்.
 இயற்கை வேளாண்மை குறித்து நம்மாழ்வார் வழியில், ஜூன் 12 ஆம் தேதி விழுப்புரம் மரக்காணத்திலிருந்து ராமேசுவரம் வரையிலும் 596 கி.மீ. தொலைவுக்கு மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. இதில், திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் பங்கேற்க உள்ளன. இப்போராட்டத்தில் தனிநபர்களும், பொதுமக்களும் கலந்துகொள்ள வேண்டும்.
 தஞ்சை மாவட்டம் அதிராமபட்டினத்தில் நடைபெறும் மனிதச் சங்கிலியில் மதிமுக சார்பில் நானும் பங்கேற்க உள்ளேன். வள்ளுவன் வாக்குப்படி எதிர்வரும் ஆபத்தைத் தடுக்காவிட்டால், வருங்கால சந்ததியினர் மாபெரும் இன்னல்களுக்கு ஆளாக்கப்படுவர்.
 பொதுமக்களுடன் சமரசம் செய்து எட்டு வழிச் சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் கூறியது குறித்த கேள்விக்கு, தமிழக முதல்வர் அவரது அரசியலுக்காக எட்டு வழிச் சாலைத் திட்டத்தை அமல்படுத்த, அவரது கொள்கையை சமரசம் செய்து கொள்கிறார். ஆனால் அப்பகுதி மக்கள் இவரது சமரசத்தை ஏற்க மாட்டார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com