
ஆம்பூர் அருகே அடையாளம் தெரியாத விலங்கு கடித்துக் குதறியதில் ஆடு ஒன்று சனிக்கிழமை இறந்தது. ஆட்டைத் தாக்கியது சிறுத்தையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
உமர் ஆபாத் பகுதியை அடுத்த பாலூர் கிராமத்தைச் சேர்ந்த சிவா ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். அவர் தனது ஆடுகளை வனப்பகுதியை ஒட்டியுள்ள இடத்திற்கு மேய்ச்சலுக்காக சனிக்கிழமை ஓட்டிச் சென்றார். அப்போது சத்தம் கேட்டு அப்பகுதிக்கு சிவா சென்று பார்த்தபோது ஆடு ஒன்று, அடையாளம் தெரியாத விலங்கால் கடிபட்டு இறந்து கிடந்தது. மற்றொரு ஆடு காயங்களுடன் இருந்தது தெரியவந்ததது.
ஆட்டைக் கடித்த விலங்கு சிறுத்தையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஆம்பூர் வனத்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.