
சென்னை விமான நிலையத்தில் ரூ. 70 லட்சம் மதிப்பிலான 2 கிலோ எடையுள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு துபையிலிருந்து சனிக்கிழமை வந்த இரு விமானங்களில் பயணித்த கேரளத்தைச் சேர்ந்த அட்னன், ஷிபிலு ரகுமான் ஆகியோரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அதில், அவர்கள் தங்களது உள்ளாடைக்குள் ரூ. 66 லட்சம் மதிப்பிலான 1.95 கிலோ எடையுள்ள தங்கத்தைக் கடத்தி வந்தது தெரியவந்தது.
மூதாட்டியிடம் பறிமுதல்: கொழும்புவில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணித்த சீதாலட்சுமி (63) என்ற மூதாட்டியை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவர் ரூ. 4 லட்சம் மதிப்பிலான 131 கிராம் தங்க நகைகளைக் கடத்தி வந்தது தெரியவந்தது. கடத்தல் நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.