
திருச்சி விமான நிலையத்தில் ரூ.11 லட்சம் மதிப்புள்ள 4 தங்க வளையல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாதுகாப்புப் படை அதிகாரி கூறியதாவது:
துபாயில் இருந்து திருச்சி வந்த தஞ்சையை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி உடைமைகளையும் சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது 331 கிராம் எடை கொண்ட 4 தங்க வளையல்களை கடத்தி வந்தது சோதனையில் தெரிய வந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், செந்தமிழ்ச்செல்விடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.