
மின்தேவை தற்போதைய நிலையைவிட 500 மெகாவாட் அதிகரித்தாலும், ஈடுசெய்வோம் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
நாமக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது: கோடையில் மின் தேவை 16,500 மெகாவாட் வரையில் எதிர்பார்த்தோம். ஆனால், 16,100 மெகாவாட் தான் மின்சாரம் தேவைப்பட்டுள்ளது. அதற்கு மேல் 500 மெகாவாட் கூடுதலாக தேவை ஏற்படின், அதை நாங்கள் ஈடுகட்டுவோம். மின்சார உதவிப் பொறியாளர் நியமனத்தில் வெளி மாநிலத்தவர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், இரண்டு ஆண்டுக்குள் அவர்கள் தமிழ் படித்தால் மட்டுமே பணியில் தொடர முடியும். இல்லையெனில், பணியை இழக்க நேரிடும். மின் வாரிய கேங்மேன் பணியிடங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 5,000 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என்றார்.