ரூ.25 ஆயிரத்தை தாண்டியது தங்கம்

சென்னையில் சனிக்கிழமை ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.25 ஆயிரத்தைத் தாண்டியது. பவுனுக்கு ரூ.152 உயர்ந்து, 25,136-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ரூ.25 ஆயிரத்தை தாண்டியது தங்கம்
Updated on
1 min read

சென்னையில் சனிக்கிழமை ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.25 ஆயிரத்தைத் தாண்டியது. பவுனுக்கு ரூ.152 உயர்ந்து, 25,136-க்கு விற்பனை செய்யப்பட்டது.
 விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், திருமணம் உள்பட பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்கும் மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
 தங்கத்தின் விலை கடந்த ஜனவரி மாதத்தில் படிப்படியாக உயர்ந்து 28-ஆம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.25 ஆயிரத்தைத் தாண்டியது. பிப்ரவரி மாதத்தில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டது. குறிப்பாக, பிப்ரவரி 20-ஆம் தேதி பவுன் ரூ.25,808-ஆக இருந்தது. அதைத் தொடர்ந்து அதன் விலை படிப்படியாக குறைந்து மே மாதத்தில் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் ஜூன் தொடக்கத்தில் தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்தது. அதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (ஜூன் 7) ஒரு பவுன் ரூ.24,984 ஆகவும், சனிக்கிழமை ரூ.152 உயர்ந்து 25,136-க்கு விற்பனை செய்யப்பட்டது.
 இந்த விலை உயர்வுக்கு காரணம் என்ன என்பது குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சல்லானி கூறியது: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீனப் பொருள்களுக்கு அபரிமிதமாக சுங்கவரியை அமெரிக்கா விதித்துள்ளது. இதுபோல, சீனாவில் இறக்குமதியாகும் அமெரிக்க பொருள்களுக்கு அபரிமிதமான சுங்க வரியை சீனா விதித்துள்ளது. இரு வல்லரசு நாடுகளுக்கும் இடையே பொருளாதார போர் ஏற்பட்டுள்ளது. இதனால், தொழில்துறை சார்ந்த பங்குகள் பலவீனம் அடைந்துள்ளன.
 பெரிய முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். இதனால், உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்து, அதன் தாக்கம் இங்கு காணப்படுகிறது. இந்தப் பொருளாதார போர் முடிவுக்கு வந்தால், தங்கம் விலை குறையும். அதுவரை தங்கத்தின் விலை உயரவே வாய்ப்பு இருக்கிறது என்றார் அவர்.
 சனிக்கிழமை விலை
 ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
 1 கிராம் தங்கம் 3,142
 1 பவுன் தங்கம் 25,136
 1 கிராம் வெள்ளி 40.30
 1 கிலோ வெள்ளி 40,300
 வெள்ளிக்கிழமை விலை
 ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
 1 கிராம் தங்கம் 3,123
 1 பவுன் தங்கம் 24,984
 1 கிராம் வெள்ளி 40.10
 1 கிலோ வெள்ளி 40,100
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com