
அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தேமுதிக தலையிடாது என தேமுதிக பொருளர் பிரேமலதா விஜயகாந்த் வியாழக்கிழமை தெரிவித்தார்.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தபின், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. இதற்கு பருவமழை பொய்த்துப் போனதே முக்கிய காரணமாகும்.
இனிவரும் காலங்களில் மழைநீரை சேமிப்பது மிக அவசியம். தேமுதிக சார்பில் லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடனான கூட்டணி தொடரும்.
அதிமுகவில் இரட்டைத் தலைமை குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் கருத்து கூறுவது ஏற்புடையதல்ல. தேமுதிகவும் அதில் தலையிடாது. விஜயகாந்தின் உடல் நிலை நலமாக உள்ளது. வரும் உள்ளாட்சி தேர்தலில் தொண்டர்களைச் சந்தித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றார் அவர்.