சுடச்சுட

  

  ஆயுஷ் மருத்துவத் துறையின் கீழ் உள்ள சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற இந்திய பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கு இம்மாத இறுதியில் இருந்து விண்ணப்பப் பதிவு தொடங்கும் என ஆயுஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த சில நாள்களில் வெளியாகும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
  பாரம்பரிய மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை, அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு பாரம்பரிய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும், யுனானி மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும், யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும் உள்ளன.
  அதேபோன்று, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் 100 இடங்கள், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் 50 இடங்கள், நாகர்கோவில், கோட்டாறில் உள்ள ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் 60 இடங்கள் என  6 அரசு கல்லூரிகளில் மொத்தம் 390 இடங்கள் உள்ளன. இதேபோல 27 தனியார் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,200 இடங்கள்  உள்ளன. 
  எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட அலோபதி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடைபெறுகிறது. இந்நிலையில் சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது.
  ஆனால், கடந்த ஆண்டு சில காரணங்களை முன்னிறுத்தி இந்தப் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே தமிழகத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. ஆனால் நிகழாண்டில், நீட் தேர்வு மூலமாக மட்டுமே பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. 
  இதனால், இந்த ஆண்டு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற வாய்ப்புள்ளது. யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துக்கு தனியாக கவுன்சில் இல்லாததால், அந்த பட்டப்படிப்புகளுக்கு மட்டும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறவிருக்கிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai