கந்து வட்டிக்கொடுமை: இளைஞர் தீக்குளிக்க முயற்சி

கந்து வட்டிக் கொடுமையால் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை  இளைஞர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு
தீக்குளிக்க முயன்ற இளைஞரை தடுத்த போலீஸார் மற்றும் ஊர்க்காவல் படையினர்.
தீக்குளிக்க முயன்ற இளைஞரை தடுத்த போலீஸார் மற்றும் ஊர்க்காவல் படையினர்.


கந்து வட்டிக் கொடுமையால் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை  இளைஞர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர் அறிவானந்தன்(35). இவரது மனைவி புவனேஸ்வரி. அரசுப் பள்ளி ஆசிரியை.  இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அறிவானந்தன் கரூர் காந்தி
கிராமத்தில் வசித்துவரும் சுப்ரமணி என்பவரிடம் ரூ.4 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கினாராம். வாங்கிய பணத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் திருப்பிக் கொடுத்துவிட்டாராம். ஆனால் இன்னும் பணம் தர வேண்டும், மீட்டர் வட்டியும் தர வேண்டும், பணத்தையும், வட்டியையும் தராவிட்டால், உனது சீட்டுப் பணத்தையும் தரமாட்டேன் எனக்கூறி சுப்ரமணி மிரட்டினாராம். மேலும் சுப்ரமணி, புவனேஸ்வரியிடம் வாங்கிய  காசோலையையும் தர மறுத்துவிட்டாராம். 
இதுதொடர்பாக கரூர் பசுபதிபாளையம் போலீஸில் கடந்த மே 19-ஆம் தேதி அறிவானந்தன் புகார் செய்தும்  இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் விரக்தியடைந்த அறிவானந்தன் திங்கள்
கிழமை ஆட்சியரகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்துக்கு வந்தார். நுழைவுவாயில் அருகே அவர், திடீரென தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனைக்கண்ட போலீஸார் உடனே அறிவானந்தனிடம் இருந்த பெட்ரோல் பாட்டிலை பறித்து, அங்கிருந்த தீயணைப்பு வாகனத்தில் இருந்த நீரை அவர் மீது பாய்ச்சியடித்து அவரை மீட்டனர். பின்னர் அவரை ஆட்சியரிடம் அழைத்துச்சென்று மனு அளிக்கச் செய்தனர். ஆட்சியர் இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி யிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அனுப்பிவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com