தமிழகத்தில் தலைமைச் செயலாளர் பதவியை அலங்கரித்த 45 அதிகாரிகள்

தமிழகத்தின் தலைமைச் செயலாளர் பதவியை இதுவரை 45 அதிகாரிகள் அலங்கரித்துள்ளனர்.

தமிழகத்தின் தலைமைச் செயலாளர் பதவியை இதுவரை 45 அதிகாரிகள் அலங்கரித்துள்ளனர். அதுகுறித்த விவரம்:
 தமிழகத்தின் தலைமைச் செயலாளர் பதவி என்பது சுதந்திர இந்தியாவுக்கு முன்பாக மெட்ராஸ் மாகாணமாக இருந்த காலத்தில் இருந்தே உள்ளது.
 அதாவது, 1940-ஆம் ஆண்டு நவம்பர் 27-இல் மெட்ராஸ் மாகாணத்தின் முதல் தலைமைச் செயலாளராக எஸ்.வி.ராமமூர்த்தி பொறுப்பேற்றார். நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு வரை ஆறு பேர் தலைமைச் செயலாளர்களாக பொறுப்பு வகித்தனர்.
 விடுதலை இந்தியாவின் முதல் தலைமைச் செயலாளர்: நாடு விடுதலை பெற்ற நேரத்தில், மெட்ராஸ் மாகாணத்தின் தலைமைச் செயலாளராக ராமுன்னி மேனன் பொறுப்பு வகித்தார். இதன்பின்பு, சி.கே.விஜய ராகவன், சத்யநாதன், எம்.வி.சுப்பிரமணியன், டி.என்.எஸ்.ராகவன், ஆர்.கே.கோபால்சாமி, எஸ்.கே.செத்தூர், டி.ஏ.வர்கீஸ், சி.ஏ.ராமகிருஷ்ணன் என அடுத்தடுத்து மூத்த அதிகாரிகள் தலைமைச் செயலாளர் பதவியை அலங்கரித்தனர்.
 1969-ஆம் ஆண்டு வரை இந்தியன் சிவில் சர்வீஸ் (ஐசிஎஸ்) ஆக இருந்த பெயர், இந்திய ஆட்சிப் பணியாக அதாவது ஐ.ஏ.எஸ். ஆக மாற்றப்பட்டது. அதன்படி, இ.பி.ராயப்பா, பி.சபாநாயகம், வி.கார்த்திகேயன், சி.வி.ஆர்.பணிக்கர், கே.திரவியம், கே.சொக்கலிங்கம், டி.வி.அந்தோணி, ஏ.பத்மநாபன், எம்.எம்.ராஜேந்திரன், டி.வி.வெங்கடரமணன், என்.ஹரிபாஸ்கர், ஏ.எஸ்.பத்மநாதபன், கே.ஏ.நம்பியார், ஏ.பி.முத்துசாமி, பி.சங்கர், சுகவனேஸ்வர், லட்சுமி பிரானேஷ், என்.நாராயணன், எல்.கே.திரிபாதி, கே.எஸ்.ஸ்ரீபதி, எஸ்.மாலதி, தேபேந்திரநாத் சாரங்கி, ஷீலா பாலகிருஷ்ணன், மோகன் வர்கீஸ் சுங்கத், கே.ஞானதேசிகன், பி.ராமமோகன ராவ், கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் தலைமைச் செயலாளர்களாக இருந்துள்ளனர். அவர்களில், வி.கார்த்திகேயன், டி.வி.அந்தோணி ஆகியோர் இரண்டு முறை தலைமைச் செயலாளர்களாக இருந்துள்ளனர்.
 கடந்த சில ஆண்டுகளில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது அடுத்தடுத்து தொடர்ச்சியாக இரண்டு தலைமைச் செயலாளர்களும் (கிரிஜா வைத்தியநாதன், சண்முகம்) தமிழகத்தைச் சேர்ந்த தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com