
புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரியை இடமாற்ற கோரிய மனு தொடர்பாக ஒருவாரத்தில் பரிசீலிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதால் அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இம்மனு தொடர்பாக ஒருவாரத்தில் பரிசீலிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.