அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்கிறது: இழுக்கும் சுதீஷ் 

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்கிறது என்று தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்கிறது: இழுக்கும் சுதீஷ் 

சென்னை: அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்கிறது என்று தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணியில் அங்கம் வகிப்பது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்.  பேச்சுவார்த்தை இழுபறியாக இருந்த நிலையில் மற்றொரு பக்கம் தேமுதிக நிர்வாகிகள் சிலர் திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்துக்கு வந்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்கிறது என்று தேமுதிக துணைச் செயலாளர் : சுதீஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பியூஷ் கோயலுடனான சந்திப்பு முடிந்த பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்றிரவு தொலைபேசியில் அழைத்து, இன்று சென்னை வருவதால் வந்து சந்திக்குமாறு கூறியிருந்தார். அதன் காரணமாகவே அவரை வந்து சந்தித்தேன். இன்று அமாவாசை என்பதால் வேலைகளின் காரணமாக காலையில் அவரை வந்து பார்க்க முடியவில்லை. எனவே மதியம் 1 மணியளவில் வந்து சந்தித்தேன்.

கூட்டணியில் இடம்பெறுவது குறித்து அவரிடம் ஆலோசித்தேன். பிரதமர் வந்திருப்பதால் பியூஷ் கோயலுடன் நிறைய நேரம் பேச முடியவில்லை. நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக இருக்கிறோம், பாஜகவுடன் தான் எங்கள் கூட்டணி என்று. தமிழ்கத்தில் கூட்டணிக்கு அதிமுக தலைமை என்பதால் அவர்களுடன் பேசுகிறோம். எனவே அதிமுகவுடன் எங்களது கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்கிறது.

திமுக பொருளாளர் துரைமுருகனுடன் கூட்டணி குறித்து பேசியது உண்மைதான்.. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு முதலில் இடங்கள் ஒதுக்கியது என்பது அவர்களது விஷயம். ஆனால் அதுகுறித்த எங்களது வருத்தத்தை தெரியப்படுத்தி இருக்கிறோம். தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியது போல எங்களது பலத்திற்கு ஏற்ப தொகுதிகளைக் கேட்போம்.

தற்போது கூட்டணியில் எத்தனை இடங்கள், எத்தனை தொகுதிகள் என்பதே முடிவாக நிலையில் இன்றைய கூட்டத்தில் தேமுதிக பங்கேற்க இயலாது. அனால் அடுத்து பிரதமர் சென்னை வரும்போது நடைபெறும் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com